Wednesday, June 22, 2016

பி.எட்., கல்லூரிகளில் சோதனை நடத்த முடிவு

அனைத்து பி.எட்.கல்லூரிகளிலும்உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா எனமத்திய குழுவினர் சோதனை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில், 690 பி.எட்.கல்லூரிகளுக்குதேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்குதமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைஇணைப்பு
அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2015 வரைஓராண்டு படிப்பாக பி.எட்.இருந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படிதற்போதுஇரண்டு ஆண்டு படிப்பாக உயர்த்தப்பட்டது. இதற்குதனியார் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுஇரண்டாண்டு பி.எட்.படிப்பு அமலுக்கு வந்தது.
இந்நிலையில்இரண்டாம் ஆண்டு பி.எட்.படிப்பை அமல்படுத்தபல கல்லூரிகள்உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதை தொடர்ந்துஅனைத்து கல்லூரிகளிலும் ஆய்வு நடத்தமத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை, 1ம் தேதி முதல், 690 கல்லூரிகளிலும்இந்த சோதனையை நடத்தஆசிரியர் கல்வியியல் பல்கலைக்குதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த தகவலைஅனைத்து கல்லூரிகளுக்கும்தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை கடிதமாக அனுப்பியுள்ளது. எனவேபி.எட்.கல்லூரிகள் கிலியில் உள்ளன. சரியான இடவசதி இல்லாத சிலடுபாக்கூர் தனியார் கல்லூரிகளில்அவசர அவசரமாக வகுப்பறைகளை இரண்டாக பிரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

No comments:

Post a Comment