Saturday, December 6, 2014

பி.எட்., எம்.எட்., எம்.பில் முடித்த 69,473 பேருக்கு பட்டமளிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்.
8 பதக்கம் பெற்ற முதல் மாணவி
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கவர்னர் கே.ரோசய்யா தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். வேலூர் ஆக்ஸிலியம் ஆசிரியர் கல்வியில் கல்லூரி பி.எட். மாணவி எஸ்.நித்யா 8 பதக் கங்களை பெற்று பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்றார்.
2-வது இடத்தை மதுரை மங்கையற்கரசி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி சபரிஷா பெற்றார். இவர்கள், பிஎச்.டி. மாணவர்கள் உள்பட 74 பேர் நேரடியாக வந்து பட்டம் பெற்றனர்.
விழாவுக்கு வராமல் விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் 69 ஆயிரத்து 399 மாணவ-மாணவிகளுக்கும் பட்டம் கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மொத்தத்தில் 69 ஆயிரத்து 433 பேர் பட்டம் பெற்றனர்.
உயர்கல்வி படிப்போர் சதவீதம் உயர்வு
விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசுகையில் தமிழ்நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு உயர்கல்வி மாணவர் சேர்க்கை 38.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.கோவிந்தா கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:-
இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர் பணி சவால் மிகுந்தது. செல்போன், இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால் அவற்றை எளிதில் மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே ஆசிரியர்கள் வகுப்பு பாடத்துடன் நின்றுவிடாமல் மாணவர்களை அறிவு மிகுந்தவர்களாக ஆக்க வேண்டும். ஆசிரியர்கள் அவ்வப்போது புதிய புதிய தொழில்நுட்பங்களையும், புதிய பாடங்களையும் படித்து தெரிந்து அவற்றை மாணவர்களை கற்கவைக்க வேண்டும். எனவே சவால் மிகுந்த இந்த காலத்தில் திறமையான மாணவர்களை ஆசிரியர்களாக போகும் நீங்கள் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு ஆர்.கோவிந்தா பேசினார்.
வரவேற்பு
விழாவில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்கா, ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.
விழா நடைபெறுவதற்கு முன்பாக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் உள்ள ஒரு மின் விளக்கில் இருந்து மின்சார கசிவு காரணமாக புகை வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அரங்கில் உட்கார்ந்திருந்த மாணவ- மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அதை அணைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகள் அரங்குக்குள் உட்கார அனுமதிக்கப்பட்டனர்

Saturday, August 9, 2014

பி.எட். படிப்புக்கான காலத்தை இரு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பியபோது, தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.

Friday, August 8, 2014

பி.எட்., வகுப்பறை பயிற்சியில் சிக்கல் இடைநிலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, பி.எட்., முடிப்பது அவசியம்.பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தபால் வழியில் பி.எட்., படிப்பு, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை உள்ளிட்ட பல பல்கலையில் வழங்கப்படுகிறது. இதில் ஆசிரியர் வகுப்பறை பயிற்சியாக, 40 நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.பி.எட்., என்பதால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 9, 10ம் வகுப்புகளில் மட்டுமே வகுப்பறை பயிற்சியை எடுத்துக்கொள்ளவேண்டும் என, ஸ்டடி சென்டர்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், சேலம் மாவட்டத்தில் துவக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும், 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வகுப்பறை பயிற்சிஅனுமதிக்கு, தொடக்கக்கல்வி அலுவலகத்தை அணுகியபோது, நடுநிலைப்பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்கள் அனைத்தும், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு பாடம் நடத்தினால் மட்டுமே, பி.எட்., பட்டம் வழங்கப்படும் என, மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், இருதலைக்கொள்ளி எறும்பாக, இடைநிலை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:தொடக்கக்கல்வி அலுவலகத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பயிற்சி எடுப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என, ஸ்டிரிக்டாக கூறிவிட்டனர்.

ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்களோ, 9, 10ம் வகுப்புகளில் தான் பயிற்சி எடுக்க வேண்டும் என, கூறுகின்றனர். ஸ்டடி சென்டர்களோ, "தமிழகம் முழுவதும் இதே நிலை' என்கின்றனர். சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர். படிப்பை முடிக்கும் வேலையில், இரு தரப்பினரும் தொடர்ந்து அலைக்கழித்து வருவதால், என்ன செய்வதென தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sunday, August 3, 2014

6ம் தேதி முதல் 9ம் தேதி வரை
பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு

மதுரை: பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு வரும் 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 169 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மாநிலத்தின் 20 இடங்களில் ஆன்லைன் வசதி செய்து விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டதில், 10 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் ஆக.6ல் துவங்கி ஆக.9 வரை நெல்லை, மதுரை, சேலம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்படும். இக்கலந்தாய்வு முடிந்ததும் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.

அகில இந்திய அளவில் பிஎட், கால அளவை 2 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து எழுத்து பூர்வமான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15ம் கல்வியாண்டில் தமிழகத்தில் புதிதாக 15 கல்வியியல் கல்லூரிகள் துவக்க அனுமதிக்கப்படும். அனைவருக்கும் கல்வி கொள்கையில் தரமான கல்வி கொடுக்க வேண்டும். இதற்கு தரமான தகுதியான ஆசிரியர்கள் வேண்டும். இதனடிப்படையில்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தகுதித்தேர்வு குறித்து பிஎட் படிப்பிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி: துணைவேந்தர் தகவல்

தமிழகத்தில், 2014-15 நடப்புக் கல்வியாண்டில் புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் துவங்குவதற்கு முன்னதாக, கல்லூரிகளின் பேராசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் போன்றோர்களை ஒருங்கிணைத்து 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறவேண்டும், கல்வி பயிற்றுவிப்பது எப்படி, பிரச்னைக்கு இடம் தராமல் நிர்வகிப்பது எப்படி, மாணவர்களிடம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், பெற்றோர்களிடம் நிர்வாகத்தினர் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத காரணத்தால் பிரச்னை எழும்போது சமாளிப்பது எப்படி போன்றவை குறித்து பல்கலைக்கழகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கான கல்வி பயிற்றுவித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து விளக்கம் தரப்படும்.

இந்த ஆண்டுக்கு, ஏற்கனவே சென்னை, கோவை ஆகிய இடங்களில் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்2-ம் தேதி இன்று(நேற்று) மதுரை கேஎல்என் கல்வியியல் கல்லூரியில் மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட்3-ம் தேதி இன்று நெல்லையிலும், 4-ம்தேதி சேலத்திலும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டங்களில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது, மாணவர் சேர்க்கையிலும் அரசு உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வலியுறுத்தி கூறப்படுகிறது. இதனால், 2 ஆண்டுகளில் மாநிலத்திலுள்ள 60 சுயநிதிக் கல்லூரிகள் குறித்து எவ்வித புகாரும் வந்ததில்லை.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளிலுள்ள 2,169 இடங்களுக்கு விண்ணப்பிக்க 29 இடங்களில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டது. இதில் 10,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2,169 தகுதியான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி துவங்கி, 9-ம் தேதி வரை நடைபெறும். ஒற்றைச்சாளர முறையில் நெல்லை, மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இக்கலந்தாய்வு முடிந்தவுடன் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.

கல்லூரி, பள்ளிகள் இருக்கும் வரை பிஎட் படிப்புக்கான மவுசு குறையாது. முன்பு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது, 1-5-ம் வகுப்பு வரை மட்டுமே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் வாய்ப்பு கொடுக்கப்படுவதால், பிஎட் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பல வெளிநாடுகளிலும் தமிழக பிஎட் கல்விப் பாடத்திட்டத்தை பின்பற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அகில இந்திய அளவில் பிஎட் படிப்புக்கான காலஅளவை 2 ஆண்டுகளாக நீடிப்பது குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. துணைவேந்தர் என்ற முறையில் எழுத்துப்பூர்வமாக எங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம். அதை வெளிப்படையாக கூறஇயலாது.

2014-15 நடப்புக் கல்வியாண்டில் 12 புதிய கல்வியியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்படும், என்றார்.

Monday, July 21, 2014

பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல் - தினமலர்பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல் - தினமலர்

மதுரை:"பி.எட்., படிப்பிற்கு 'ஆன்--லைனில்' விண்ணப்பிக்கும் போது, 'கிரேடிங்' முறையிலுள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலையில் அதற்கான உரிய மதிப்பெண் பெற்று குறிப்பிட வேண்டும்," என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை 'கவுன்சிலிங்' மூலம் நடக்கவுள்ளது.

இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். முதல் முறையாக இந்தாண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக மாநிலம் முழுவதும் 29 ஒருங்கிணைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மதுரையில் ஜஸ்டின், சிவகங்கையில் அழகப்பா கல்வியியல் கல்லுாரி, துாத்துக்குடி வ.உ.சி.,, நெல்லை செயின்ட் இக்னீசியஸ் கல்வியியல் கல்லுாரிகளின் மையங்களில் விண்ணப்பிக்கலாம். 'கிரேடு' முறையில் உள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலையில் இருந்து உரிய மதிப்பெண் பெற்று, விண்ணப்பத்தில் குறிப்பிட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும், என்றார்

Thursday, July 17, 2014

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் 21 உள்ளன. 649 சுயநிதி பி.எட். கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 2 ஆயிரத்து400 பி.எட். இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு மட்டும் ஒற்றைச் சாளற முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவ–மாணவிகளை சேர்க்க உள்ளோம். இந்த கலந்தாய்வு முதல் முதலாக பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.பி.எட். படிக்க விரும்பும் மாணவ–மாணவிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 19–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 29 மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 3 மையங்கள் ஏற்படுத்தி அவற்றில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரியில் உள்ள மையத்தில் விண்ணப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையத்தை நாடலாம்.இது பற்றிய முழுவிவரமும் இணையதளத்தில் (www.onlinetn.com) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 19–ந்தேதி தான் செயல்படத் தொடங்கும். அன்று விவரங்களை அறிந்து கொள்ளலாம். 28–ந்தேதி கடைசி நாள் விண்ணப்பிக்க மாணவ–மாணவிகள் அந்த மையங்களுக்கு செல்லும்போது, புகைப்படம் வைத்திருந்தால் கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் உங்களை அதிகாரிகளே புகைப்படம் எடுப்பார்கள்.விண்ணப்பிக்க அத்தனை உதவிகளையும் செய்வார்கள். தப்பாக விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம். எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த 29 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்க 28–ந்தேதி கடைசி நாள்.பல்கலைக்கழக இணைய தள முகவரி www.tntue.in கலந்தாய்வு 28–ந்தேதிக்கு பிறகு 3 அல்லது 4 நாட்கள் கழித்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். பாடம் வாரியாக வெளியிடப்பட உள்ளது. பின்னர் ரேங்க் மற்றும் கலந்தாய்வு தேதி அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ்.மூலம் அனுப்பப்படும். செல்போன் மற்றும் பி.எஸ்.என்.எல். தரைவழி (லேண்ட் லைன்) தொலைபேசி மூலமும் பேசி தெரிவிக்கப்படும். எம்.எட். படிப்பில் சேர விண்ணப்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது பல்கலைக்கழக பதிவாளர் கலைச்செல்வன் உடன் இருந்தார்.
பி.எட்., எம்.எட். படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க புதிய வசதி.

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மற்றும்அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ள இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29 இடங்களில் ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்படும். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருப்பார்கள். அவர்களிடம் தகுந்த ஆவணங்களைக் கொடுத்து கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 19-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஒருங்கிணைப்பு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன், மாணவர்களுக்கு ஒரு நகல் தரப்படும். இதனை மாணவர்கள் வைத்துக் கொள்ளவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 வசூலிக்கப்படும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் ரூ. 175 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஒருங்கிணைப்பு மையத்தின் சேவை கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும் என்றார் துணை வேந்தர்.ஒருங்கிணைப்பு மையங்கள் எவை? சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்:தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை., ஐ.ஏ.எஸ்.இ., சைதாப்பேட்டை, ஸ்டெல்லா மடிடூனா கல்வியியல் கல்லூரி காஞ்சிபுரம்.

Wednesday, July 9, 2014

பாரதியார் பல்கலை.எம்.எட். நுழைவுத் தேர்வு தேதி மாற்றம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். நுழைவுத்தேர்வு தேதி ஜூலை 27-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுவதாக இருந்தது. அதேநாளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வும் நடைபெற உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் வேண்டுகோள் வந்தது.

அதையேற்று, நுழைவுத்தேர்வு தேதி 20- ஆம் தேதிக்குப் பதிலாக 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் http://www.b-u.ac.in/இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு

கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது.
மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது.

இதற்கான, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.இதனால், இந்த கல்வியாண்டு மட்டும் தான், ஓராண்டு கொண்ட பி.எட்., படிப்பு நடைமுறையில் இருக்கும். படிப்பு செலவினங்கள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பி.எட்., படிப்பிற்கு, இந்த கல்வியாண்டில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக, வெறிச்சோடிய பல கல்வியியல் கல்லுாரிகளிலும், தற்போது மாணவ, மாணவியரின் கூட்டம் அலை மோதுகிறது

Saturday, July 5, 2014

TNOU:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை :2015 -B.Ed., தொலைதூர கல்வி சேர்க்கை அறிவிப்பு.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ள தொலைதூர கல்வி பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் முழு நேரபணியிலுள்ள இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் தகவல்களுக்கு www.tnou.ac.in என்ற 2015.இணையதளத்தை அணுகலாம்.

Wednesday, July 2, 2014

M.Ed: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் M.Ed படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 
பி.எட். முடித்துவிட்டு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகத் தொலைதூரக்கல்வி மையம் மற்றும் அதன் கல்வி மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதை டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் இணையத்தில் (www.bdu.ac.in/cde) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். விண்ணப்பம் மற்றும் கல்வி மையங்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜூலை 25-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 24-ந் தேதி நடத்தப்படும் என்று பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி மைய இயக்குநர் கே.ஆனந்தன் அறிவித்துள்ளார்.

Sunday, June 29, 2014

Wednesday, June 11, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை, எஸ்.டி. இந்து கல்லூரி நாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரி கோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தருமபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரி திருச்சி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி சென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி மசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரி ராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரி மதுரை, பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக ரூ. 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.500க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, ரூ.550 க்கான வரைவோலையை "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை 15' என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்கதாக எடுத்து, "பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600015' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IGNOU B.ED,M.ED ADMISSION NOTICE|IGNOU B.ED,M.ED ADMISSION NOTICE|



IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் சேர பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது.2014-ம்
ஆண்டுக்கான பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் படிப்புகளை வழங்கி வருகிறது. பிஎட் படிப்பில் சேர பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றிய அனுபவம் இருப்பதுடன் தற்போது பணியில் இருக்க வேண்டியது அவசியம்.

எம்எட் படிப்பில் சேர பிஎட் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் தேவை. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. பிஎட் முடித்த பிறகு 2 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் தேவை. அதோடு தற்போது ஆசிரியர் பணியில் இருக்க வேண்டும். பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். 2014-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை இக்னோ மண்டல அலுவலகங்கள் (சென்னை, மதுரை, திருவனந்தபுரம்) மற்றும் அவற்றுக்கு உட்பட்ட கல்வி மையங்களில் ரூ.1,000 ரொக்கமாக செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இக்னோ இணையதளத்தில் (www.ignou.ac.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத் தலாம். இவ்வாறு பயன்படுத் தும்போது, “IGNOU” என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் (ரூ.1,050-க்கு) எடுத்து, எந்த மண்டலத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டுமோ அங்கு செலுத்த தக்கதாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் வட மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் சென்னை மண்டலத்துக்கும் (தொலைபேசி எண் 044-24312766) திருச்சி மற்றும் அதற்கு தென்புறம் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை மண்டலத்துக்கும் (0452-2370733) நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்கோடி மாவட்டங்களின் ஆசிரியர்கள் திருவனந்தபுரம் மண்டலத்துக்கும் (0471-2344113) விண்ணப்பிக்க வேண்டும்.

மண்டல அலுவலங்களிலும், கல்வி மையங்களிலும் ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப் பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது. எம்எட் படிப்பை பொருத்த வரையில் ஒவ்வொரு மண்டலத் திலும் 35 இடங்கள் உள்ளன. பிஎட் படிப்புக்கு மண்டலத்துக்கு ஏற்ப 4 ஆயிரம், 2,500 என குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Monday, June 9, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை, எஸ்.டி. இந்து கல்லூரி நாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரி கோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தருமபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரி திருச்சி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி சென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி மசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரி ராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரி மதுரை, பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக ரூ. 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.500க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, ரூ.550 க்கான வரைவோலையை "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை 15' என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்கதாக எடுத்து, "பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600015' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியார் பல்கலை. இணையதளத்தில் இருந்து எம்.எட். படிப்பு பிரமாணப் பத்திர தகவல் நீக்கம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எம்.எட். படிப்பு தொடங்குவதற்காக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் (என்.சி.டி.இ.) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் போலியானது என்ற சர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்து, அது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதைத் தொடர்ந்து, தற்போது எம்.எட். படிப்பு குறித்த பிரமாணப் பத்திர தகவல் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கூடம் சார்பில் எம்.எட். படிப்பினை அஞ்சல் வழியில் (தொலைதூரக் கல்வி) நடத்துவதற்கு, பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி

கவுன்சிலின் மண்டல இயக்குநருக்கு 2014 பிப்ரவரி 26-ஆம் தேதி விண்ணப்பம் செய்யப்பட்டு, அங்கீகாரமும் கிடைத்து விட்டது.

தற்போது எம்.எட். சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப விநியோகமும் நடந்து வருகிறது.

இதற்கென பல்கலைக்கழகம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், எஸ்.சுதர்சன் என்பவர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தின் கல்வியியல் துறையில் முழுநேரப் பேராசிரியராக 2014 பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பணிபுரிந்து வருவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர் ஏற்கெனவே அரசு உதவி பெறும் தனியார் கல்வியியல் கல்லூரியில் புகார் ஒன்றில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்டவர். நிலைமை இவ்வாறிருக்க பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி பல்கலைக்கழக முழுநேரப் பேராசிரியராக எஸ்.சுதர்சன் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார் என்றும், விளம்பரம் செய்யாமல் எப்போது தேர்வு செய்யப்பட்டார் என்றும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.

பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆசிரியர் நியமிக்கப்படும்போது, பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி நியமிக்கப்பட வேண்டும்.

எனவே முழுநேரப் பேராசிரியர் நியமனத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

இந்த நியமனம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு எந்த விவரமும் தெரியாத நிலையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் குறித்த பிரமாணப் பத்திரம் போலியானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதனிடையே பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து (ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.க்ஷ-ன்.ஹஸ்ரீ.ண்ய்ள்க்ங்ஹச்ச்ண்க்ஹஸ்ண்ற்ம்ங்க்.ல்க்ச்) எம்.எட். படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர தகவல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

அரசு விசாரிக்க வேண்டும்: இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி.பிச்சாண்டி கூறுகையில், எம்.எட். படிப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர தகவல் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இவ்விஷயத்தில் ஏதோ தவறு உள்ளது தெரியவருகிறது.

இவ்விஷயம் குறித்து ஆளுநரும், தமிழக அரசும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு நடந்திருந்தால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



கிரிமினல் நடவடிக்கை தேவை



இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கூறுகையில், பல்கலைக்கழகங்களே தவறு செய்யும்போது இணைப்புக் கல்லூரிகள் எப்படி நியாயமாக செயல்படும் என்ற கேள்வி எழுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்பு தொடங்க தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர விவரம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் உண்மையானதா, போலியானதா, முறைகேடுகள் எதுவும் நடந்திருக்கிறதா என்பது குறித்தும் தெரியவில்லை. ஒரு பல்கலைக்கழகமே தவறு செய்வது மன்னிக்க முடியாத செயலாகும். இதில் ஏதாவது தவறு நடந்திருப்பது தெரியவந்தால் குறிப்பிட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
பி.எட். படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பம்:நுழைவுத்தேர்வு இல்லை; தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

தொலைதூரக்கல்வி பி.எட். படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகம் தொலை தூரக்கல்வியில் பி.எட். படிப்பை நடத்தி வருகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி அனுபவம் உடைய பட்டதாரிகள் சேரலாம். தற்போது தொடர்ந்து பணியில் இருந்து வர வேண்டும். தமிழ்வழிக்கு 500 இடங்களும், ஆங்கிலவழிக்கு 500 இடங்களும் உள்ளன.

2014-2015-ம் கல்விஆண்டில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் ஆகஸ்ட்14-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.500. பல்கலைக்கழக மண்டல அலுவலகங்கள் மற்றும் கல்வி மையங்களில் விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ள லாம். இந்த விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.tnou.ac.in) தெரிந்துகொள்ளலாம்.

மேலும், இந்த இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத் திக்கொள்ளலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது விண் ணப்பக் கட்டணமாக ரூ.500-க்கு ‘தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை-15’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டை இணைக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற ரூ.550-க்கு டிமாண்ட் டிராப்டை பல்கலைக் கழகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பல்கலைக் கழகத்துக்கு ஆகஸ்ட் 14-ம்தேதிக் குள் அனுப்ப வேண்டும்.

நுழைவுத்தேர்வு இல்லை

சேர்க்கை பணி அக்டோபர் மாதம் தொடங்கும். நுழைவுத் தேர்வும் ஏதும் கிடையாது. வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-24306657, 24306658 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.முருகன் தெரிவித்துள்ளார்.

Sunday, June 8, 2014

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

பி.எட். படிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015ம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் 9ந் தேதி (நாளை) மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.

விண்ணப்பங்கள் ஆகஸ்டு 14ந் தேதி வரை வினியோகம் செய்யப்படும். அதே போன்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14ந் தேதிக்குள் திருப்பப்பெறப்படும். இதற்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரிசென்னை, எஸ்.டி.இந்து கல்லூரிநாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரிவேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவிழுப்புரம் ஆகியவற்றில் வினியோகம் செய்யப்படுகின்றன.

மண்டலம், கல்விமையங்கள்

மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரிகோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம்மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரிதர்மபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரிதிருச்சி மற்றும் கல்வி மையங்களான ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரிசென்னை, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரிசென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரிகோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரிதஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரிதிருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரிமசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரிராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரிமதுரை, பவானி கல்வியியல் கல்லூரிகடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக 500 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ர்ன்.ஹஸ்ரீ.ண்ய் ன் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து 500 ரூபாய்க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, 550 ரூபாய்க்கான வரைவு காசோலையை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை15 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து, பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை600015 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

2015 ஜனவரியில் தொடக்கம்

மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது

Tuesday, June 3, 2014

இந்த ஆண்டு புதிதாக 40 பி.எட் கல்லூரிகள்: துணைவேந்தர் தகவல்

தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் மாணவ, மாணவிகள் இடையே அதிகரித்து வருகிறது.

இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு அதிக வரவேற்பு இல்லாததால் பெரும்பாலான தனியார் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பணி கட்டாயம் கிடைக்கும் என்பதால் ஏற்கனவே பி.எட் படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வருகிறார்கள்.

மேலும், பிளஸ் 2 முடித்தவர்களும், பி.ஏ., பி.எஸ்.சி., பட்டபடிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சியை முடித்தால்தான் தகுதித் தேர்வு எழுத முடியும். எனவே, கடந்த 5 வருடங்களாக பி.எட் கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் தற்போது 657 பி.எட் கல்லூரிகள் உள்ளன. இதில் 21 கல்லூரிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளாகும்.

மேலும் இந்த வருடத்துக்கு 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் பி.எட் படிப்பை முடிக்கிறார்கள். இந்த வருடம் மேலும் 40 புதிய பி.எட் கல்லூரிகள் வர இருப்பதாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

40 புதிய கல்லூரிகள் தொடங்க டெல்லியில் உள்ள என்.சி.டி.இ அங்கீகாரம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தில் இணைப்பு அனுமதி பெற்றால்தான் கல்லூரியை தொடங்க முடியும். அதற்கு 10 சான்றிதழ் அவசியம். சுற்றுச் சூழல் சான்று, கட்டிடத்தின் உறுதித் தன்மை, டி.டி.பி., அப்ரூவல் உள்ளிட்ட இந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். முறையாக விண்ணப்பத்தால் அனுமதி வழங்கப்படும்.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவது குறித்து அரசிடம் இருந்து விரைவில் அறிவிக்கை வரும். அவை வந்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும்.

பி.எட் 2 வருட படிப்பு இந்த ஆண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு (2015–16) தான் இந்த புதிய முறை தொடங்கும். இதற்காக என்.சி.டி.ஏ, பொதுமக்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
பி.எட். வினாத்தாள் அவுட் ஆகவில்லை: துணைவேந்தர் மறுப்பு

தமிழகம் முழுவதும் பி.எட்., மற்றும் எம்.எட். தேர்வுகள் தற்போது 102 மையங்களில் நடைபெற்று வருகின்றன. தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் வகுத்துள்ளது.

பறக்கும் படை அமைத்து ரகசியமாகவும் கண்காணிக்கிறார்கள். கடந்த மாதம் 30–ந் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தேர்வை துணைவேந்தர் விஸ்வநாதன் சாதாரண உடையில் ரகசியமாக சென்று சோதனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பி.எட். உளவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியானதாக தகவல் பரவியது. சேலம் அரசு கலைக்கல்லூரியில் தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் இந்த தகவலை பரப்பி உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வினாத்தாள் தான் நேற்றைய தேர்வில் கேட்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இந்த தகவலை அங்குள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் பரப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான வினாத்தாள் உண்மையிலே அவுட் ஆனதா? என்பது குறித்து கல்வியியல் பல்கலைக் கழக துணை வேந்தர் விஸ்வநாதனிடம் கேட்கப்பட்டது. அதை அவர் மறுத்து கூறியதாவது:–

சேலத்தில் பி.எட். வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல் முற்றிலும் வதந்தி. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. வினாத்தாள் அச்சிடும் அச்சகத்தில் இருந்து நேரிடையாக தேர்வு நடைபெறும் மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்லப்படும். அங்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர், தலைமை கண்காணிப்பாளர் முன்னிலையில் வினாத்தாள் ‘சீல்’ பிரிக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும். இதில் தவறு நடக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.

தேர்வுக்கு முன்பாக முக்கியமான சில கேள்விகளை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கூறுவது வழக்கம். அது போன்று கூறிய சில வினாக்கள் நேற்றைய உளவியல் தேர்வில் வந்துள்ளது. அதை யாரோ தவறாக வினாத்தாள் அவுட் ஆகி விட்டதாக பரப்பி விட்டுள்ளனர். தேர்வில் எந்த முறைகேடுக்கும் இடமளிக்காத வகையில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இந்த தவறான தகவல் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டது. இதை மாணவர்கள், பெற்றோர்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
LikeLike ·  · Promote · 

Sunday, June 1, 2014

பி.எட், எம்.எட் படிப்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை

தனியார் கல்வியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் கூறியுள்ளார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட், எம்.எட் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் கல்லூரி என 102 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. இதில் 15 மையங்களாக பிரிக்கப்பட்டு 8 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வித்தாளில் எந்தவித குழப்பமும் இல்லை.

கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக ரெப்ரசண்டேடிவ், பறக்கும்படை என மூன்றடுக்கு கண்காணிப்பு உள்ளது. சுமார் 75 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்ற ஆண்டு தேர்வு எழுதி அரியர் உள்ள மாணவர்கள் 5 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கல்வியியல் கல்வியின் தரத்தை உயர்த்த பிஎட் கல்வியை இரண்டு ஆண்டுகளாக மாற்ற தேசிய ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் (என்சிடிஇ) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து வெப்சைட்டில் மாணவர்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கல்வியியல் கல்வி இரண்டாண்டுகளாக மாற்றப்படுமா என்பது தெரியவரும். தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பணம் வாங்க கூடாது என அரசு ஆணையை தமிழக முதல்வர் பிறப்பித்துள்ளார். அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் முழுவதும் வழங்கப்படும். அப்போதுதான் அவர்களுக்கு உரிய பணத்தை கல்லூரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்