Monday, November 14, 2016

பி.எட்., கணினி அறிவியல்; அங்கீகாரம் வழங்க வலியுறுத்தல்!

பி.எட்.கணினி அறிவியல் படிப்புக்குமுறையான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு பி.எட்.கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டம்ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராமசந்திரன்மாநில செயலாளர் குமரேசன் ஆகியோர் கூறியதாவது: 
கடந்த, 1992 முதல் இன்று வரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கணினி அறிவியலில் பி.எட்.படித்துள்ளனர். இப்படிப்புக்கு தமிழக அரசு முறையாக அங்கீகாரம் வழங்கவில்லை. அரசு நடத்தும் ஆசிரியர் நியமன தேர்விலும்வாய்ப்பு வழங்குவதில்லை. 
ஏ.இ.இ.ஓ., - டி.இ.ஓ.பதவிகளுக்குபி.எட்.முடித்திருந்தால்தகுதி என இருக்கும் நிலையிலும்பி.எட்.கணினி அறிவியல் பட்டதாரிகளை அனுமதிப்பதில்லை. 
சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் கூடபுறக்கணிக்கின்றனர். தனியார் பள்ளிகளிலும்கம்ப்யூட்டர் தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்திவிட்டுஎங்களைப்போலமுறையாக படித்தவர்களை நியமிப்பதில்லை. 
எங்களுக்கு எந்த ஒரு பணி வாய்ப்பும் இல்லாத நிலையில்தமிழக அரசு பி.இ.படித்தவர்களும் பி.எட்.படிக்க அனுமதி வழங்கி இருப்பது வேதனைக்கு உரியதாகும். பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - பி.எட்.என படித்து முடித்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினி அறிவியல் பட்டதாரிகள் வேலைக்காக காத்துள்ள நிலையில்தமிழக அரசுஇக்கல்விக்கு முறையான அங்கீகாரம் வழங்க வேண்டும். 
இல்லாவிடில் இந்த கல்வியை ரத்து செய்ய வேண்டும். அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுவதைவிடஎங்கள் கல்வியை அங்கீகரித்துமுறையான வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். 
புதிய கல்வி கொள்கையில்அனைத்து பள்ளிகளிலும் கணினி தொழில் நுட்ப கல்விக்கான பாடத்திட்டம் உள்ளது. அதை அனுமதித்தால்எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment