Wednesday, April 12, 2017

B.Ed, படிப்புக்கு தேசிய நுழைவு தேர்வு

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், நேரடியாக பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன
. மைசூரு, அஜ்மீர், போபால், புவனேஷ்வர் உள்ளிட்ட, மண்டல மையங்களில், இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன.
மிகக் குறைந்த கட்டணத்தில், தங்குமிடம் வசதிகளுடன், பட்டப்படிப்பும், பி.எட்., படிப்பும் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு, உடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. வரும் கல்வி ஆண்டில், பி.எட்., இணைந்த பி.எஸ்சி., - பி.ஏ., படிப்புகள், நான்கு ஆண்டுகளும், பி.எட்., இணைந்த எம்.எஸ்சி., படிப்பு, ஆறு ஆண்டுகளும் நடத்தப்படுகிறது. அதே போல், பி.எட்., - எம்.எட்., தலா இரு ஆண்டுகளும், பி.எட்., - எம்.எட்., இணைந்த படிப்பு, மூன்று ஆண்டுகளும் கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்பில் சேர, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதற்கு, www.ncert-cee.kar.nic.in என்ற இணையதளத்தில், மே, 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment